இலியானாவுக்கு திருமணம் நடந்தது எப்போது? குழந்தை பிறந்த பின் வெளியான தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

நடிகை இலியானா திருமண அறிவிப்பை வெளியிடாமலேயே கர்ப்பம் குறித்த தகவலை வெளியிட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குழந்தை பிறந்த பிறகு அவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘கேடி’ ’நண்பன்’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததோடு அவ்வப்போது கர்ப்பிணி புகைப்படங்களையும் வெளியிட்டார் என்பதும் இன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளதோடு அந்த குழந்தையின் பெயரையும் அறிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகை இலியானா கர்ப்பமாக இருந்ததாக அறிவித்ததற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே மைக்கேல் டோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதாவது அவரது திருமணம் மே 13ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் கர்ப்பமாகி உள்ளார் என்பதும் தற்போது குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலியானா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.