இசைஞானிக்கு சம்பர்ப்பணம் செய்யப்பட்ட விஜய் பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தில் இடம்பெற்ற 'ஏண்டி ஏண்டி' பாடலின் டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த டீசரை இன்னும் ஆயிரக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாடலை இசைக்கடவுள் இசைஞானி இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்வதாக இந்த பாடலுக்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார். மெலடி பாடலாக அமைந்த இந்த பாடலை விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளனர் என்பதும் கவியரசர் வைரமுத்து எழுதியுள்ளார் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்
இந்த பாடல் குறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறும்போது, "நான் ஒரு தீவிர கிட்டார் ரசிகன். இந்த மெலடி பாடலை கிட்டார் இசையில் மிகவும் ரொமான்டிக்கான உருவாக்கியிருக்கிறேன். இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமர்பிக்கிறேன். இந்த பாடல் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பாடலை இளையதளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருமே மிகச்சிறப்பாக பாடியுள்ளனர்' என்று கூறியுள்ளார்.
இந்த பாடலின் டீசருக்கு கிடைத்த வெற்றி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள மற்ற பாடல்களுக்கும் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com