வேலாயுதம் படத்தின் இன்ஸ்பிரஷன்தான் 'தனி ஒருவன்'. ஜெயம் ராஜா
- IndiaGlitz, [Monday,August 17 2015]
ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன் ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்த ரிலீஸ் செய்த ஜெயம் ரவி, தற்போது ஹாட்ரிக் வெற்றிப்படமாக வரும் 28ஆம் தேதி 'தனி ஒருவன்' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். ஹாட்ரிக் வெற்றியை அவர் எதிர்பார்த்து காத்திருந்தாலும், அவரது சகோதரரும் இயக்குனருமாகிய ஜெயம் ரவிக்கு நான்கு வருடங்களுக்கு பின்னர் வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் விஜய் நடித்த வேலாயுதம்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் குறித்து ஜெயம் ராஜா கூறியதாவது: "ஐந்து வருடங்கள் கழித்து ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்துள்ளேன். எனது மற்ற படங்களை போல இந்த படம் ரீமேக் படம் கிடையாது. இது எனது ஒரிஜினல் கதை. மேலும் இந்த படத்தில் ஆடியன்ஸ்களுக்கு ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் ஒன்றை கூறியுள்ளோம். இந்த மெசேஜ், வேலாயுதம் படத்தை இயக்கும்போது எனக்கு தோன்றியது எனலாம். எனவே இந்த படம் வேலாயுதத்தின் இன்ஸ்பிரஷன் என்றும் கூறலாம்.
எனது படம் ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதெல்லாம் எனக்கு ஆசை இல்லை. பார்ப்பவர்களை திருப்திபடுத்தினால் போதும். தமிழில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீஸ் ஆனாலும், ஐந்து சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. அந்த ஐந்து சதவீதத்தில் எனது படம் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸாக நடித்துள்ளார். ஆனாலும் இது ஒரு வித்தியாசமாக போலீஸ் வேடன். நயன்தாராவுக்கு இந்த படத்தில் வலிமையான கேரக்டர். பாடலுக்கு மட்டும் ஹீரோவுடன் டான்ஸ் ஆடிவிட்டு போகும் சாதாரண கேரக்டர் இல்லை. அரவிந்தசாமி இந்த படத்தில் முதன்முதலாக வில்லனாக தோன்றுகிறார். முதலில் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்ற ஐயம் எனக்கு இருந்தது. ஆனால் முழு ஸ்கிரிப்டையும் கேட்டவுடன் அவர் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார்' என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.