'விஜய் 61' படத்தில் பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,January 24 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்ட பிரச்சனைகளையும் தாண்டி இந்த படம் திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி காமெடி நடிகர் சத்யன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யுடன் நடிகர் சத்யன் 'துப்பாக்கி', 'நண்பன்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் திரைக்கதையை 'பாகுபலி' புகழ் விஜயேந்திரபிரசாத் எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

சூர்யாவின் 'சி 3' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது...

உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா? பீட்டா ராதாராஜனை வெளுத்து வாங்கிய டிடி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் தியாக உள்ளத்துடன் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை, குளிர் பாராமல் தன்னலம் கருதாமல் போராடினர்...

அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. நடிகர் சிவகுமார்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவாக இயற்றப்பட்டுவிட்டதால் மாணவர்களின் இத்தனை நாள் அறவழி போராட்டம் முழுவெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மெரினாவில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஜல்லிகட்டு ஆர்வலர்கள், திரையுலகினர், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட ī

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக சற்று முன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடை முற்றிலும் நீங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது...