மாறுவேடத்தில் ஆண்டாளை தரிசித்த விஜய்?

  • IndiaGlitz, [Monday,September 28 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதி சென்று வருவதைபோல இளையதளபதி விஜய்யும் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் வேளாங்கன்னி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்முறை விஜய், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மாறு வேடத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு முகத்தில் துணியை போட்டு மறைத்து யாருக்கும் தெரியாமல் சாமி தரிசனம் செய்ததாகவும், அதன் பின்னர் அவர் அங்கிருந்து வேளாங்கன்னிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. சாமி தரிசனத்தின்போது யாராவது தன்னை அடையாளம் கண்டுகொண்டால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதற்காக முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டதோடு தலையில் பெரியதொப்பியும் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

'புலி' படத்தின் பரபரப்பு ஒருபக்கம் இருந்து வந்தாலும் இன்னொரு பக்கம் விஜய் எவ்வித பதட்டமும் இன்றி 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும், இடையில் கிடைத்த ஓய்வு நாட்களில்தான் இந்த கோவில் தரிசனம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.