close
Choose your channels

பா.ரஞ்சித் இயக்கத்தில் இளையதளபதி விஜய்?

Saturday, July 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே வாரத்தில் ரூ.326 கோடி வசூல் செய்த சாதனை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கிய ரஞ்சித் தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார். 'கபாலி' படம் நேற்று முதல் மலாய் மொழியில் வெளியானதோடு அடுத்த மாதம் முதல் சீன, ஜப்பான், தாய்லாந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரஞ்சித், தாணு உள்பட 'கபாலி' படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ரஞ்சித் தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கின்றாராம். இந்த படத்தில் அதர்வா நாயகனாக நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சித், இளையதளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அவருடைய கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் மிக விரைவில் விஜய்-ரஞ்சித் இணையும் படம் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment