பா.ரஞ்சித் இயக்கத்தில் இளையதளபதி விஜய்?

  • IndiaGlitz, [Saturday,July 30 2016]

ஒரே வாரத்தில் ரூ.326 கோடி வசூல் செய்த சாதனை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கிய ரஞ்சித் தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார். 'கபாலி' படம் நேற்று முதல் மலாய் மொழியில் வெளியானதோடு அடுத்த மாதம் முதல் சீன, ஜப்பான், தாய்லாந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரஞ்சித், தாணு உள்பட 'கபாலி' படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ரஞ்சித் தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கின்றாராம். இந்த படத்தில் அதர்வா நாயகனாக நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சித், இளையதளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அவருடைய கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் மிக விரைவில் விஜய்-ரஞ்சித் இணையும் படம் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More News

அஜித் படத்தை உறுதி செய்த காஜல் அகர்வால்

தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் முதல் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது...

சென்ற ஆண்டு கமல்-அஜித், இந்த ஆண்டு தனுஷ்-கார்த்தி

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டுமே...

ஆகஸ்ட்டில் கவுதம் மேனனின் 2 படங்கள் ரிலீஸ்

பிரபல இயக்குனர் கவுதம்மேனன், சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

கபாலியுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ரூ.300 கோடி வசூலை தாண்டி தற்போது ரூ.400 கோடி...

'கபாலி' சக்ஸஸ் மீட்: 6 நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...