'தெறி' வெற்றி. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இளையதளபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நேற்று முன் தினம் தமிழ்ப்புத்தாண்டில் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது.
விஜய்யின் அதிரடி ஆக்சன் மற்றும் எமோஷனல் நடிப்பு, அட்லியின் விறுவிறுப்பான திரைக்கதை, சமந்தா-எமிஜாக்சன் ஆகிய இரண்டு ஹீரோயின்களின் எண்ட்ரி, நைனிகா, மொட்டை ராஜேந்திரனின் நடிப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை மற்றும் பல பாசிட்டிவ் காரணங்களால் 'தெறி' திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருகின்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் 'தெறி' படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். விஜய் தனது சமூக வலைத்தளத்தில் 'Thanks Lot Dear Friends.... For the Overwhelming Response for #Theri Happyy....ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com