'தளபதி 61' கதை இதுவா?

  • IndiaGlitz, [Wednesday,March 22 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இம்மாத இறுதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன்பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை 'தந்தையை கொலை செய்த வில்லனை பழிவாங்கும் இரண்டு மகன்கள்' என்று கூறப்படுகிறது. கதையின் மையப்புள்ளி பல படங்களில் பார்த்ததுதான் என்றாலும் இதில் உள்ள ஒரு முக்கியமான சமூக பிரச்சனை மற்றும் மேக்கிங் ஆகியவை ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அட்லி இயக்கத்தில் உருவாகி இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2.0 பிரச்ச்னை. ஷங்கர் மற்றும் பத்திரிகையாளர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0 படத்தின் படப்பிடிப்பில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஜினியின் '2.0' படப்பிடிப்பில் பிரச்சனை. ஷங்கரின் உதவியாளர் உள்பட 2 பேர் கைது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ரஜினிக்கு முக்கிய பதவி அளிக்க முன்வந்துள்ள மலேசிய அரசு?

தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ரஜினியை கடந்த இருபது வருடங்களாக பல அரசியல் கட்சிகள் இழுக்க முயற்சி செய்தன. ஆனால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார் ரஜினிகாந்த்

ரஜினிக்கு நான் ஜோடியா? குஷ்பு ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும், அதன்பின்னர் வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முன் ஓபிஎஸ் தரப்பின் வாதங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணியாக உடைந்தது. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிடுவதால் இருதரப்பினர்களும் இரட்டை இலை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்...