ஹாட்டில் இருந்து கூலுக்கு மாறும் 'விஜய் 61' படக்குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதையும், இந்த படப்பிடிப்பில் விஜய், வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபப்ட்டது என்பதையும் பார்த்தோம். இந்நிலையில் விஜய் 61 படக்குழுவினர் நாளை ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கிளம்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுவரை சென்னை, ராஜஸ்தான் மீண்டும் சென்னை என ஹாட்டான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தி வந்த 'விஜய் 61' குழுவினர் இனிமேல் உறைய வைக்கும் குளிர்ப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் 'விஜய் 61' படப்பிடிப்பில் இதுவரை விஜய்க்கு நீரஜா கோனா காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து வந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்படவுள்ள காட்சிகளுக்கு பிரபல பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் கோமல் ஷாஹானி பணிபுரிவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments