சென்னையில் இந்த வார 'தெறி' வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,May 02 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 22 முதல் 24 வரையிலான சென்னை வசூல் ரூ.1,85,32,820 என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய மூன்று நாட்களின் சென்னை வசூல் நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
ஏப்ரல் 29,30, மற்றும் மே 1ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் 20 திரையரங்குகளில் 286 காட்சிகள் நடைபெற்று ரூ.82,30,790 வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் ஏப்ரல் 14 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக ரூ.9,86,18,295 வசூல் செய்துள்ளது.
இன்று அல்லது நாளைக்குள் ரூ.10 கோடி வசூலை சென்னையில் மட்டும் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் 'தெறி' ரிலீஸான அனைத்து நகரங்களிலும் சாதனை வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் குறித்து பலர் அறியாத 20 விஷயங்கள்

'தல' என்று அன்புடன் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் இன்று தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார்...

ரஜினி-ஷங்கரின் '2.0'படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்....

சிம்புவின் புதிய பட டைட்டில் இதுதான்

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது...

பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன் படத்திறப்பு விழாவில் கமல்-விஷால்

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ என்ற புகழ்பெற்ற பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே....

அஜித்' என்ற ஒற்றைச்சொல் மந்திரம்

தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்தை நடிகர் என்ற கோணத்தில் பார்ப்பதை விட நல்ல மனிதர் என்ற கோணத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கியிருக்கும் ஒருவர், எந்தவித பந்தாவும் இல்லாமல் பெரும்பாலான சர்ச்சைகளுக்கு தனது மெளனத்தை மட்டுமே பதிலாக அளிப்பவர்தான் அஜித்....