'தெறி' சாதனையை 'தெறி'யே முறியடிக்குமா?

  • IndiaGlitz, [Sunday,March 27 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' படத்தின் டீசர் கடந்த மாதம் வெளிவந்து இந்திய அளவில் சாதனை படைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த டீசர் கிட்டத்தட்ட 10 லட்சம் பார்வையாளர்களையும், 3 லட்சம் லைக்குகளையும் நெருங்கிவிட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'தெறி' படத்தின் டிரைலரும் வெகுவிரைவில் டீசரின் சாதனையை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே வாரத்தில் 'தெறி' டிரைலருக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் பார்வையாளர்களும் 2 லட்சம் லைக்ஸ்களும் கிடைத்துள்ளது. எனவே இன்னும் ஒருசில நாட்களில் 'தெறி' டீசரின் சாதனையை 'தெறி' டிரைலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் படங்கள் ஏற்கனவே வசூல் உள்பட பல சாதனைகள் படைத்துள்ள நிலையில் அவருடைய முந்தைய சாதனையை அவருடைய படங்களே முறியடித்த வரலாறு உண்டு. அந்த வகையில் மீண்டும் ஒரு முறியடிப்பு சாதனை அவருடைய படமே நிகழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைகிறாரா சமுத்திரக்கனி?

நாடோடிகள், போராளி உள்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அமலாபால் நடித்த 'நிமிர்ந்து நில்' படத்தை இயக்கினார்...

சசிகுமாரின் அடுத்த நாயகி யார் தெரியுமா?

'தாரை தப்பட்டை' படத்திற்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் முடிவடைந்த 'வெற்றிவேல்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

விஷாலின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நாயகி

விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.......

கபாலி ரிலீஸ் எப்போது? பா.ரஞ்சித் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

விஷாலின் 'மருது' ரிலீஸ் எப்போது?

விஷால் நடிப்பில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கிய 'மருது' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து...