'புலி' டிரைலர் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,August 13 2015]

இளையதளபதி விஜய் நடித்த புலி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 2ஆம் தேதி ரிலீஸாகி அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது 'புலி' படக்குழுவினர் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.


'புலி' படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் பிறந்த தினம் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இந்த அறிவிப்பை வெளியிடும் வகையில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரைலர் ரிலீஸ் தேதியுடன் ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறப்பட்ட ஸ்டில் ஒன்றையும் இணையதளத்தில் புலி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், உள்பட பலர் நடித்துள்ள புலி திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 17ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.