விஜய்யின் 'புலி' படத்தின் லேட்டஸ்ட் விபரங்கள்
- IndiaGlitz, [Tuesday,September 08 2015]
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இன்னும் ஒருசில நாட்களில் தணிக்கை செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 'புலி' படத்தின் பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் துவக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூ.100 கோடிக்கும் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, பிரபு, சுதீப், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படம் இதுவரை இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.