''புலி'' படத்தின் வட இந்திய வியாபாரம் ஆரம்பம்

  • IndiaGlitz, [Wednesday,September 09 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டதை பார்த்தோம். இந்நிலையில் 'புலி' படத்தின் இந்தி டப் ரிலீஸ் உரிமையை பெற பிரபல வட இந்திய தொலைக்காட்சி நிறுவனமான 'வயாகாம் 18' (Viacom18) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகும் அதே அக்டோபர் 1ஆம் தேதி 'புலி' படத்தின் இந்தி டப்பிங்கையும் வட இந்தியாவில் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இந்தி பாடல்களின் இசை வெளியீட்டு விழாவும் மும்பையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 'புலி' திரைப்படம் வரும் வெள்ளியன்று தணிக்கை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், ரோபோ சங்கர், வித்யூலேகா, தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்

More News

இளையதளபதியின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள்

தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் என்ற கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே....

'நானும் ரெளடிதான்' படத்தின் பாடல் வரிகள்

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'நானும் ரெளடிதான்' திரைப்படம், விஜய்யின் 'புலி' படத்துடன் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் ஒருசில வரிகளை இசையமைப்பாளர்...

படப்பிடிப்பிற்கு தாமதமாக சிம்பு வருவது உண்மையா? கவுதம் மேனன்

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. இந்த படத்தில் சிம்பு...

யோகியிடம் பயிற்சி எடுத்து கொண்ட 'கபாலி' நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க நடிகர் கிஷோர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

'யட்சன்' நடிகருடன் ஜோடி சேரும் ஆனந்தி?

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' மற்றும் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த 'சண்டிவீரன்' ஆகிய படங்களில்...