close
Choose your channels

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' டீசர் விமர்சனம்

Friday, October 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்துள்ளது.
ஒரு நிமிடம் 4 வினாடிகள் உள்ள இந்த டீசரின் முதல் ஷாட்டிலேயே இதுவொரு பக்கா ஆக்சன் எண்டர்டெயின்மெண்ட் படம் என்பதை நிரூபித்துவிட்டது. விஜய் ஒருவரை ஆக்ரோஷமாக அடிப்பதுடன் இந்த டீசர் தொடங்குகிறது.
மேலும் வழக்கம்போல அழகான புன்னகையுடன் அறிமுகமாகும் விஜய், பேசும் ஒவ்வொரு வசனமும் பஞ்ச் வசனத்திற்கு இணணயாக உள்ளது. 'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குத்தான் அள்ளு'..... அதிகமா இருக்கணும்', இங்க நிறைய பேருக்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒண்ணு என்கிட்ட இருக்குது' ஆகிய வசனங்கள் இத/ற்கு உதாரணம்.
நான்கைந்து ஷாட்களில் வந்தாலும் கீர்த்திசுரேஷின் அழகு மற்றும் துள்ளல், ஒரே ஒரு காட்சிகளில் வரும் வில்லன்கள் ஜெகபதிபாபு, மைம்கோபியின் மிரட்டல், சதீஷின் அதிரடி குத்தாட்டம் ஆகியவை டீசரின் பிற சிறப்பு அம்சங்கள் ஆகும்.
'நெருப்புடா' புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்காமராஜ் குரலில் 'யார்ரா யார்ரா இவன் ஊரைக்கேட்டா தெரியும், முன்னால நீ நின்னு பார்ரா புரியும், என்ற பாடலில் திரையில் தோன்றும்போது கைதட்டல் விண்ணை பிளக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சந்தோஷ் நாராயணனின் மற்றொரு சிறந்த பின்னணி இசை அமைந்த படமாக இது இருக்கும்.
மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனனத்து தரப்பினர்களையும் கவர்ந்த இந்த டீசர் நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment