திரையரங்கு உரிமையாளர்களால் நெருக்கடிக்கு ஆளான 'பைரவா'
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் தமிழகம் உள்பட உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஜனவரி 12 முதல் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழகத்தில் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கிட்டத்தட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் முன்பதிவுகள் முடிந்துவிட்டன
தமிழகத்தை பொருத்தவரை 'பைரவா' படத்தின் ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய்யின் கோட்டை என்று கூறப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிலைமை சாதகமாக இல்லை
கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்த்கர்களுக்கும் இடையிலான பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் 12ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் கலந்து கொள்ளாத சுமார் 70 திரையரங்குகளில் மட்டுமே 'பைரவா' கேரளாவில் வெளியாகவுள்ளது. இருப்பினும் இந்த படம் கேரளாவில் ரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com