உலகின் முதல் 'பைரவா' காட்சி எப்போது தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,January 10 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு முன்பே விஜய் ரசிகர்களுக்காக திரையிடப்படுகின்றது. ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனாலும் முந்தைய நாள் பல நாடுகளில் பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் முதல் 'பைரவா' திரைப்பட காட்சி திரையிடப்படும் நாடு மற்றும் திரையரங்குகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நாளை அதாவது ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூரில் உள்ள 'பாம்பே டாக்கீஸ்' என்ற திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு திரையிடப்படுகிறது. இதுதான் உலகின் முதல் 'பைரவா' காட்சி ஆகும். இதேபோல் இரவு 10 மணிக்கு கேத்தி மற்றும் GVYishun ஆகிய திரையரங்குகளிலும் 'பைரவா' திரையிடப்படுகின்றது.

எனவே விஜய் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நாளை நள்ளிரவே இந்த படத்தின் ரிசல்ட் குறித்த தகவல்கள் வெளிவந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரையரங்கு உரிமையாளர்களால் நெருக்கடிக்கு ஆளான 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் தமிழகம் உள்பட உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஜனவரி 12 முதல் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவி-அரவிந்தசாமியின் 'போகன்' சென்சார் தகவல்கள்

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது...

ஐஸ்வர்யாராய் தான் எனது முதல் சாய்ஸ். ஜெயலலிதா கூறியது ஏன்?

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யாராய் பொருத்தமாக இருப்பார் என்றே கருதப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் நடித்த 'இருவர்' படத்தில் ஐஸ்வர்யா நடித்த இரண்டு கேரக்டர்களில் ஒரு கேரக்டர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாக தடை செய்வது தவறு. பிரபல பாடகி

தமிழகம் முழுவதும் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு.

'ராஜா ரங்குஸ்கி' கதாநாயகி மாற்றம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்கவுள்ள அடுத்த படம் ''ராஜா ரங்குஸ்கி''