'பைரவா' ரிலீஸால் அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்?

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தை பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து பிரமாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராக உள்ளனர். இந்த படம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய திரையரங்குகளிலும் 'பைரவா' ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தை போலவே மிக அதிக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா. இங்கு கடந்த சில நாட்களாக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் எந்த புதிய படமும் ரிலீஸ் ஆகவில்லை

இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தபோதிலும் இன்றுவரை இந்த பிரச்சனை முழுமையாக தீரவில்லை., எனவே கேரளாவில் 'பைரவா' மிகக்குறைந்த திரையரங்குகளில் மட்டுமே அதாவது சுமார் 70 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகிறது. கேரள சூப்பர் ஸ்டார் படங்களுக்க்கு இணையாக சுமார் 200 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் இதனால் அப்செட் ஆகியுள்ளனர். இருப்பினும் இன்னும் மீதமிருக்கும் இரண்டு நாட்களில் இந்த பிரச்சனை முழுவதுமாக நீங்கி பெருவாரியான கேரள திரையரங்குகளில் 'பைரவா' படம் வெளியாக வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

More News

பிரபல இயக்குனர் தான் ஓரினசேர்கையாளர் என்று பகிரங்க ஒப்புதல்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோஹரின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கடந்த பல வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து அவரை வெறுப்பேற்றுவது உண்டு.

விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தல ரசிகர்களின் கட்-அவுட்

இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள்...

முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் - டெபிட் கார்டு பிரச்சனை

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சூர்யா

பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க ஜல்லிக்கட்டுவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண். காப்பாற்றிய கூகுள்

காதலன் கைவிட்டதால் வெறுப்படைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது அவரை கூகுள் காப்பாற்றிய நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது