ரஜினி, அஜித் இருவரையும் முந்திய விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
இப்போதெல்லாம் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் டீசரை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்தே அளக்கப்படுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோரின் படங்கள் இந்த டீசர் பார்த்தவர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளன.
ரஜினியின் `லிங்கா` மற்றும் அஜித்தின் `என்னை அறிந்தால்` டீசர்கள் இந்த வகையில் படைத்த சாதனையை விஜய் நடித்த புலி` படத்தின் டீசர் முறியடித்துள்ளது, வெளியான சில நாட்களில் புலி` டீசரை 54,12,105 பேர் பார்த்துள்ளனர்.
சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ` படத்தின் டீசர்தான் இதுவரை மிக அதிக முறை பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையைத் தக்கவைத்திருக்கிறது. ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் `ஐ` டீசரைப் பார்த்துள்ளனர். அந்தச் சாதனையை புலி` முறியடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com