தளபதி 61: விஜய்க்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான படம்: ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,May 27 2017]
இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் விஜய்க்கும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. எப்படி என்பதை இப்போது பார்ப்போம்
கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் விஜய் கதாநாயகனாக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். எனவே இந்த ஆண்டுடன் விஜய் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் பூர்த்தி ஆகியுள்ளது. 'தளபதி 61' விஜய்யின் 25வது ஆண்டு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் கதாநாயகனாக அறிமுகமான அதே 1992ஆம் ஆண்டு தான் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் அறிமுகமானார். எனவே அவருக்கும் இந்த ஆண்டு 25வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் திரையுலகில் இரண்டு மிகப்பெரிய கலைஞர்களின் 25வது ஆண்டு திரைப்படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் நிறுவனத்திற்கு 'தளபதி 61' படம் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படம் விஜய், ரஹ்மான் ஆகியோர்களுக்கு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்திற்கும் முக்கியமான படம் ஆகும்.