விஜய் என்ன நினைப்பாரோ என்று பயந்தேன்: 'பைரவா' எடிட்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர். அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட சென்சார் பணிகள் முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தை எடிட் செய்த ப்ரவீண், தனக்கு ஏற்பட்ட ஒரு தர்மசங்கடமான நிலை ஒன்றை விளக்கியுள்ளார். 'பைரவா' படத்தில் விஜய் சிறப்பாக நடித்த ஒருசில காட்சிகளை எடிட் செய்து வெளியே தள்ளும் நிலை வந்ததாகவும், ஆனால் அதற்கு விஜய் என்ன சொல்வாரோ என்று தான் அச்சம் அடைந்ததாகவும் ஆனால் விஜய் 'என்னை விட என் படம் தான் எனக்கு முக்கியம்' நீங்கள் தயங்காமல் உங்கள் பணியை செய்யுங்கள்' என்று கூறியதும்தான் தான் நிம்மதி அடைந்ததாகவும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என்றும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பதால் விஜய் சிறப்பாக நடித்த ஒருசில காட்சிகளும் 'கட்' ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் படம் வெளிவந்து ஒருசில நாட்கள் கழித்து வெட்டப்பட்ட காட்சிகள் இணணயத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com