ஹாட்டாக இருந்தாலும் ஹேப்பியாக இருக்கின்றேன். விஜய் பட நாயகி நித்யாமேனன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக இந்த படத்தின் நாயகி நித்யாமேனன் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் சென்றடைந்தார்.
ஜெய்சல்மர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சந்தித்த நித்யாமேனன், 'விஜய் 61' படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக இங்கு வந்துள்ளேன். இந்த இடம் ஹாட்டாக இருந்தாலும் விஜய்யுடன் நடிக்கவுள்ளேன் என்று நினைக்கையில் ஹேப்பியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் ஏற்கனவே பாடல் காட்சிகளுக்கான லொகேஷன்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு பாடல் காட்சி, ஒரு சண்டைக்காட்சி மற்றும் ஒருசில வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. அட்லி இயக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com