61வது படத்திற்கு தயாராகிறார் இளையதளபதி விஜய்

  • IndiaGlitz, [Saturday,April 23 2016]

இளையதளபதி விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் வெற்றி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் உற்சாகமாக விரைவில் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள 61வது படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.


விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில் விஜய் தனது 61வது படத்திற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. அட்லி, பரதன் போலவே 61வது படத்தையும் இளம் இயக்குனர் ஒருவருக்கே இயக்கும் வாய்ப்பை அவர் அளிக்கவுள்ளதாக விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் விஜய்யின் 61வது படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருப்போம்.

More News

சிவகுமாரின் மற்றொரு பிரமிக்க வைக்கும் சமூக சேவை

நடிகர் சிவகுமாரின் குடும்பம் கலைக்குடும்பம் மட்டுமின்றி சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் குடும்பம் என்பது தமிழகமே...

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மாதவன்

'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் மாதவன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரீஎண்ட்ரி ஆன திரைப்படம் 'இறுதிச்சுற்று'...

விஜய்யுடன் பாண்டியராஜன் - பிரித்வி சந்திப்பு

இளையதளபதி விஜய் சமீபத்தில் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை அடுத்து விரைவில் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்...

கபாலி ரிலீஸ் எப்போது? தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...

ஐரோப்பிய நாடுகளின் பிளாக்பஸ்டர் ஆனது 'தெறி'

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி....