வெற்றிகரமான 'விஜய் 59 'பட தலைப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜில்லா' படத்திற்கு பின்னர் மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் இந்த படத்தில் நடிக்கின்றார். சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து இணையதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மூன்று முகம்' டைட்டில் இந்த படத்திற்கு பரிசிலீக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்கு 'வெற்றி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் கடந்த 1984ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படமும் 'வெற்றி' என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விஜய் என்ற பெயரிலேயே 'வெற்றி' இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களாக வெற்றி மேல் வெற்றியை குவித்து வரும் விஜய்க்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும், இந்த படமும் அவருடைய வெற்றி படங்களில் ஒன்றாக இணையும் என்றும் கருதப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு பொங்கலில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

'சஞ்சய் தத்'தின் எளிமையை அஜீத்திடம் பார்த்தேன். ராகுல் தேவ்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இறுதிக்க

5 மொழிகளில் ரீமேக் ஆகிறதா ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்?

ரீமேக் ராஜா என்ற பெயரை கடந்த பல வருடங்களாக பெற்றிருந்த ஜெயம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டில் உருவான 'தனி ஒருவன்' பெற்ற மிகப்பெரிய வெற்றியால்...

ரூ.50 கோடி வசூலை நெருங்குகிறது ''தனி ஒருவன்''

சமீபத்தில் வெளியான ''தனி ஒருவன்'' திரைப்படம் இதற்கு முன்பு வெளியான இந்த சகோதரர்களின் படங்களை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் பெரிய சாதனை செய்துள்ளது...

பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்த பிரகாஷ்ராஜ்

இந்தியாவில் பல பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் இருப்பதால் அவற்றை பிரபலங்கள் தத்தெடுத்து முன்னேற்ற உதவவேண்டும்...