கேரள விஜய் ரசிகர்களுக்கு 'புலி' தரும் ஓணம் விருந்து

  • IndiaGlitz, [Wednesday,August 26 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதை அதன் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பில் இருந்தே அனைவருக்கும் தெரிய வந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சன் டிவியில் ஒளிபரப்பானபோது அதற்கு கூட விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி அதையும் டிரெண்ட் ஆக்கினார்கள்.


இந்நிலையில் இந்த டிரைலர் வெளியீட்டு விழா நாளை மலையாள தொலைக்காட்சியான சூர்யா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் மலையாள சேனலில் ஒளிபரப்பானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் விஜய்க்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதால் அவரது படங்கள் தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் அதிகளவு வசூலை குவித்து வருகிறது. எனவே விஜய்யின் கேரள ரசிகர்களுக்காக இந்த டிரைலர் வெளியீட்டு விழா மலையாள சேனலில் மதியம் 3 மணிக்கு ஓளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இந்த டிரைலர் விழா ஓணம் பண்டிகை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

பூஜை, ஆம்பள படங்களை அடுத்து விஷால் தனது 'பாயும் புலி' படத்தை வரும் செப்டம்பர் 4ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார்...

எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில்?

இயக்குனர் எம்.ராஜேஷ் படங்களுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும்....

'புலி' பட ரிலீஸ் தாமதம் ஏன்? ஆர்யா விளக்கம்

விஜய் நடித்த புலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது அனைவரும் தெரிந்ததே...

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கடந்த 1980-90களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது "இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்காந்த். ரஜினிக்கு பிறகு கோலிவுட்டில் ஜெயித்த கருப்பு நடிகர் இவர் மட்டுமே.....

இந்திக்கு செல்கிறது விஜய்யின் 'டாடி மம்மி''

இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வில்லு'. இளையதளபதி விஜய்,...