எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? இளையராஜா தரப்பின் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
காப்புரிமை சட்டத்தின்படி தான் இசையமைத்த பாடல்களை எஸ்பிபி தான் இல்லாத மேடையில் பாடக்கூடாது என சமீபத்தில் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எஸ்பிபிக்கு ஆதரவாக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இளையராஜாவின் தரப்பில் அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதீப்குமார் தனது விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.
கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments