இந்த நாடே தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது: இளையராஜா நகைச்சுவை

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

இசைஞானி இளையராஜா சமீபத்தில் கவிக்கோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நாடு தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுபோல நாமும் அதே வழியில் போய் கொண்டிருக்கின்றோம் என்று தற்கால அரசியலை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் நான் இந்த விழாவுக்கு வந்த பின்னர் 'இளையராஜா இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்துவார்' என்று யாராவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் சொல்லவில்லை. அப்புறம் எப்படி நான் தலைவர்? இந்த நாடே தற்போது தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது அதனால் நாமும் அப்படியே போவோம். நாம் இல்லாமல் நாடு இல்லை, நாம் தான் நாடு. நான் யாருக்கும் தலைவர் இல்லை, இறைவனுக்கு மட்டுமே தொண்டன்' என்று கூறினார்.
மேலும் அவர் பேசியபோது, 'கவிக்கோ அவர்கள் செய்த சாதனையை இந்த நாட்டில் ஏன் இந்த உலகில் யாரும் செய்தது இல்லை என்று சொல்லலாம். அவர் அறிமுகமான பின் அவர் எழுதியிருக்கிற அற்புதமான விஷயங்களை படித்தேன். எழுத்தும் எழுத்து உடையாருக்கு என்பேன் நான். உடையார் என்றதுமே வேற உடையாரை நினைக்காதீர்கள்.
கவிஞர் கண்ணதாசன் சொன்னார் கலீல் ஜிப்ரானை படிக்கும்போது எல்லாம் இது போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லையே என்று வருத்தப்பட்டேன். இப்பொழுது அப்துல் ரகுமான் வந்துவிட்டார், என் கவலை தீர்ந்தது என்று கூறினார்