'அவங்களுக்குத்தான் ரொம்ப சந்தோஷம்.. உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னைவிட அவங்களுக்கு தான் நீங்கள் அமைச்சர் ஆனது ரொம்ப சந்தோசமாக இருக்கும் என உதய நிதி அமைச்சர் ஆனதற்கு இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி, நேற்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா ஆடியோ வடிவில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே! நீங்கள் அமைச்சர் பதவியை ஏற்று உள்ளதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நான் முக்கியமாக சொல்ல நினைப்பது என்னவென்றால் நீங்கள் அமைச்சர் ஆனதற்கு என்னை விட உங்கள் அம்மா தான் மிகவும் சந்தோசமடைந்து இருப்பார்கள். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என வள்ளுவர் அழகாக கூறியது உங்கள் வாழ்வில் நிஜமாக நடந்துள்ளது. அதனால் உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்கள், பொது சேவை செய்வதில் நீங்கள் ஈடுபட தயாராகி விட்டீர்கள், நீங்கள் இந்த அமைச்சர் பதவியை நல்லமுறையில் பொதுமக்களுக்கு பயன்படுத்த வேண்டும். அமைச்சராக இருப்பதால் உங்களுக்கு மிகவும் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. இந்த பொறுப்பை நீங்கள் சரியாக செய்து மக்களிடம் பேரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments