உங்களை உலகமே பின்பற்ற போகிறது. இளைஞர்களுக்கு இசைஞானி வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா தனது ஆதரவை வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாணவர்களே, இளைஞர்களே இந்த உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் நீங்கள் இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றீர்கள். அமைதியான முறையில் எந்த ஒரு தலைவனும் இல்லாமல், தலைவனை நாடாமல் நீங்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை காட்டுகிறது. இந்த தன்னம்பிக்கையை கண்டிப்பாக இந்த உலகம் பின்பற்ற போகிறது. உலகத்திற்கே வழிகாட்டியாக நீங்கள் மாறிவிட்டீர்கள்
உத்வேகமும் உணர்ச்சியும் உள்ளுணர்வும் உங்களுக்குள்ளே இத்தனை நாள் பதுங்கி இருந்துள்ளது. இப்போது வெளியே வந்துள்ளது. இது தொடரட்டும், நீண்டு தொடரட்டும். இடையில் புகுந்து சில அரசியல் தலைவர்கள், சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் மீட்டர் போட பார்த்தார்கள். ஆனால் அதெல்லாம் பலிக்கவில்லை. மாணவர்களாகி உங்களுடைய இந்த ஒற்றுமையை நான் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இடையில் யார் புகுந்து இந்த போராட்டத்தின் வெற்றி தங்களுடையது என்று சொல்வதற்கு வழியே இல்லை. உங்கள் உத்வேகத்தை நீர்த்து போகும் வகையில் ஒருசிலர் இந்த போராட்டம் குறித்து எந்த கருத்தை சொன்னாலும் அதையெல்லாம் நீங்கள் ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து உத்வேகத்துடனும் உணர்வுடனும் ஒன்றாக இருப்பது தொடரட்டும். நான் உள்பட யாரும் உங்களுக்கு இந்த உணர்வை ஊட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் உணர்வுகள் உங்கள் உடன் பிறந்தது, அது சக்தி வாய்ந்தது என்பதை நான் நினைந்து நினைந்து மகிழ்கிறேன்,

More News

ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுத்த விக்கீபிடியா

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் போன்ற ஒருசில இடங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டை, தடை செய்ய வேண்டும் என்று பீட்டா எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதை தெரியவைத்துவிட்டது.

தமிழக அரசின் அவசர சட்டத்தில் காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்ப்பு

ஜல்லிக்கட்டுக்காக தற்போது இயற்றப்படவுள்ள அவசர சட்டம் நிரந்தர தீர்வு ஆகாது என்றும் இந்த வருடம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த உதவும் என்றும்...

7 நாளில் மன்னிப்பு. பீட்டா நிர்வாகிக்கு சூர்யா வழக்கறிஞர் நோட்டீஸ்

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரியான பீட்டா அமைப்பு சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

மருத்துவமனையில் இருந்து மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பிய ராகவா லாரன்ஸ். சல்யூட்

சென்னை மெரீனாவில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பாராது, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது தன்னலமின்றி ஜல்லிக்கட்டு என்ற தமிழினத்தின் அடையாளத்திற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகின்றனர்...

வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி மாணவ, மாணவிகள் போராட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி பல நல்ல விஷயங்களுக்கு வழிகாட்டியாக அமைந்து வருகிறது. தங்களுக்காக உண்மையாக போராட ஒரு கூட்டம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது....