உங்களை உலகமே பின்பற்ற போகிறது. இளைஞர்களுக்கு இசைஞானி வாழ்த்து
Saturday, January 21, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா தனது ஆதரவை வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாணவர்களே, இளைஞர்களே இந்த உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் நீங்கள் இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றீர்கள். அமைதியான முறையில் எந்த ஒரு தலைவனும் இல்லாமல், தலைவனை நாடாமல் நீங்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை காட்டுகிறது. இந்த தன்னம்பிக்கையை கண்டிப்பாக இந்த உலகம் பின்பற்ற போகிறது. உலகத்திற்கே வழிகாட்டியாக நீங்கள் மாறிவிட்டீர்கள்
உத்வேகமும் உணர்ச்சியும் உள்ளுணர்வும் உங்களுக்குள்ளே இத்தனை நாள் பதுங்கி இருந்துள்ளது. இப்போது வெளியே வந்துள்ளது. இது தொடரட்டும், நீண்டு தொடரட்டும். இடையில் புகுந்து சில அரசியல் தலைவர்கள், சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் மீட்டர் போட பார்த்தார்கள். ஆனால் அதெல்லாம் பலிக்கவில்லை. மாணவர்களாகி உங்களுடைய இந்த ஒற்றுமையை நான் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இடையில் யார் புகுந்து இந்த போராட்டத்தின் வெற்றி தங்களுடையது என்று சொல்வதற்கு வழியே இல்லை. உங்கள் உத்வேகத்தை நீர்த்து போகும் வகையில் ஒருசிலர் இந்த போராட்டம் குறித்து எந்த கருத்தை சொன்னாலும் அதையெல்லாம் நீங்கள் ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து உத்வேகத்துடனும் உணர்வுடனும் ஒன்றாக இருப்பது தொடரட்டும். நான் உள்பட யாரும் உங்களுக்கு இந்த உணர்வை ஊட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் உணர்வுகள் உங்கள் உடன் பிறந்தது, அது சக்தி வாய்ந்தது என்பதை நான் நினைந்து நினைந்து மகிழ்கிறேன்,
Ilaiyaraja support for Jallikattu protest
— IndiaGlitz - Tamil (@igtamil) January 21, 2017
#Jallikattu #WeSupportJallikattu #WeDoJalikattu #justiceforjallikatu pic.twitter.com/q9obOUki6p
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments