வேண்டும் என கூறிய இளையராஜா, வேண்டாம் என கூறிய சாருஹாசன்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,February 04 2019]

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி, கமல் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் இடையே பேசிய கமல்ஹாசன், 'நான் அரசியலுக்கு போறேன் என்றதும், அறிவுரை தந்து ஆதரித்தது என் அண்ணன் இளையராஜா தான். நீண்ட நாட்களுக்கு முன்பே அரசியலில் ஈடுபட வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார். அதேபோல் அரசியல் வேண்டாம் என்று கூறியது எனது அண்ணன் சாருஹாசன்.

மேலும் தன்னுடைய 100 படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்றும், தன்னுடைய படங்களை விட என்னுடைய படங்களுக்கு தான் நன்றாக இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்று ரஜினி கேட்ட அதே கேள்வியை நானும் இளையராஜாவிடம் கேட்டுள்ளேன் என்றும் இந்த மாதிரி பாடல் ஏன் எனக்கு கொடுக்கவில்லை என்று? கேள்வி கேட்டிருப்பதாகவும் கமல் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியா நடிகைகள் சுஹாசினி மற்றும் கஸ்தூரி கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

More News

'தல 59' படம் குறித்த லீக் ஆன செய்தி

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தபோதிலும் அதனை கருத்தில் கொள்ளாமல் அமைதியாக அடுத்த படத்தின் பணியை அவர் தொடங்கிவிட்டார்...

25வது வெற்றி நாள் கொண்டாடிய பேட்ட-விஸ்வாசம் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெறுவது அரிதாகவே நடந்து வரும்...

ரஜினியின் அடுத்த பட கெட்டப் இதுதானா?

ரஜினியின் '166'வது படமான இந்த படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும்...

மீண்டும் இணைந்த சிம்பு-தனுஷ்

கோலிவுட் திரையுலகில் தொழில்ரீதியில் போட்டியாக உள்ள நடிகர்கள், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருப்பதை எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

அதிகாரிகளின் முடிவு மிருகத்தனமானது: ஜிவி பிரகாஷ் கருத்து

ஊருக்குள் புகுந்த காட்டு யானையான சின்னத்தம்பியை கடந்த 25-ந்தேதி லாரியில் ஏற்றி பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வரகளியாறு வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் விட்டனர்.