close
Choose your channels

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர்: யுவன் அறிவிப்பு

Monday, January 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகம் முதல் பாலிவுட் திரையுலகம் வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு சூரரைப்போற்று என்ற படமாக உருவாகி வருகிறது

இந்த நிலையில் இசைத்துறையில் உலக சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் இந்த படம் மூலம் விரைவில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் பிரபல இசையமைப்பாளரும், இசைஞானியின் மகனுமான யுவன்சங்கர்ராஜா சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்

இசைஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுப்பதாக உறுதி செய்யப்பட்டால் அந்தப் படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிக்க தனுஷ் மிக பொருத்தமாக இருப்பார் என்றும், இந்த படத்திற்கு’ராஜா தி ஜர்னி’ என்ற டைட்டில் மிகப்பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனவே இசைஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் அந்த படத்தில் தனுஷ் நடிக்க யுவன்சங்கர்ராஜா இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment