இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ வழக்கில் திடீர் திருப்பம்!

  • IndiaGlitz, [Wednesday,December 23 2020]

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வரும் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மனு ஒன்றை சமீபத்தில் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரே ஒரு நாள் அந்த இடத்தில் தான் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த மனு குறித்து விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தை கேட்டு பதில் அளிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ’ஒரு சில நிபந்தனைகளுடன் இளையராஜாவுக்கு தியானம் செய்ய பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இளையராஜா தனது உதவியாளர் மற்றும் வழக்கறிஞருடன் வந்து தியானம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து இருந்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார். மேலும் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் உரிமை கோர மாட்டேன் என்று இளையராஜா கூறியுள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திடீரென இசைஞானி வாபஸ் பெற்றுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

இவர்தான் டைட்டில் வின்னர்: தமிழ் திரைப்பட இசையமைப்பாளரின் பதிவு!

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி, பாலாஜி, ரியோ ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் பலர் கணித்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

ரூ.220 கோடி சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்: யூடியூப் ஆச்சரியம்

ரஷ்யாவை சேர்ந்த 9 வயது சிறுவன் ரூபாய் 220 கோடி சம்பாதித்து உலகின் அதிக வருவாய் பெறும் யுடியூபர்களில் முதலிடம் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள்: கசியவிட்டது ராணியா?

தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச புகைப்படங்கள் இங்கிலாந்து நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை ஓட வைத்த பிக்பாஸ்: தடுக்கி விழுந்த பாலா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் பால் & கேட்ச் டாஸ்க்கில் நேற்று சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர். இந்த நிலையில் இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது

உலகத்தின் மீட்பர் ஏன் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்…. விளக்கம் அளிக்கும் ஆடியோ!!!

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கேட்ட எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். உலகத்தின் ரட்சகர் தன்னுடைய மகனை மாட்டுத் தொழுத்தில் பிறக்கச் செய்தார்.