விஜய் சேதுபதி, சூரிலாம் அனாதையா சினிமாவுக்கு வந்தவங்க.. - இளவரசு

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் இளவரசு என்பதும் இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மட்டுமின்றி இளவரசு ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பது பலருக்கு தெரியாத உண்மை ஆகும்.

இந்த நிலையில் நடிகர் இளவரசு நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில கருத்துக்களை கூறியுள்ளார். இப்போ வரக்கூடிய லவ் டுடே போன்ற படங்கள்ல இருக்கக்கூடிய ஒளிப்பதிவை நீங்க கவனிப்பீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகர் இளவரசு பதில் அளித்த போது ஆம் நான் கவனிப்பேன். இப்போ லவ் டுடே பண்ண இயக்குனருக்கு பார்த்திபன் கனவு தெரியாது இன்னைக்கு அவரு ஒரு மேற்கத்திய சினிமாவை பார்ப்பாரு. அந்த படங்களோட ஒப்பிட்டு உயர்த்தியும் தாழ்த்தியும் பேசுறது ரொம்ப தவறு.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை சொல்லும் பாணி இருக்கிறது அதை ரசிக்க வேண்டும் குறை சொல்ல கூடாது. அடுத்து அவரிடம் நீங்க தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து இருக்கீங்க நாடகத்துல ஏன் நடிச்சீங்க அப்டினும் நிறைய பேரு கேட்ருப்பாங்க அப்போ உங்க அனுபவம் எப்படி இருந்தது ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் நாடகம் ஏன் நடிக்க கூடாது என்று தான் கேட்பேன். நாம்ம செய்யக்கூடிய வேலையை நம்மளே தாழ்வாக பேச கூடாது. அதில் இருந்து நமக்கு ஒரு வருமானம் வருது நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன் அதை பத்தி நாம்ம குறைவா பேசக்கூடாது என்று பதில் கூறினார் .