இளையராஜாவுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்: கொரோனாவுக்காக ஒரு பாடல்:
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரசுக்கு எதிராக அனைத்து நாடுகளின் அரசுகளும் போராடி வருகின்றன. குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மனித இனத்தை கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற மருந்து கண்டு பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கொரோனா குறித்த பாடல்களை அவ்வப்போது இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர் எழுதி பாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா அவர்களும் கொரோனா வைரஸ் குறித்து ஒரு பாடலை இயற்றி இசையமைத்து உள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு உலகப் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பாரத பூமி ஒரு புண்ணிய பூமி, நாம் அதன் புதல்வர் அதை மறந்திட வேண்டாம்’ என்று தொடங்கும் இந்த பாடல் கொரோனாவை எதிர்த்து தன்னலம் கருதாது போராடிவரும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout