பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை: இளையராஜா முடிவில் திடீர் மாற்றம்!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு நாள் மட்டும் தியானம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை அவர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகைதந்து தியானம் செய்வார் என்று செய்திகள் வெளியானது

இதனை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடும் பலப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி இசையமைப்பாளர் இளையராஜாவின் பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டதாக அவருடைய செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்

மேலும் உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைக்கருவிகளை எடுத்துச் செல்ல இசையமைப்பாளர் இளையராஜா தரப்பினர் வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகதகவல் அறிந்து இளையராஜா வருத்தம் அடைந்துள்ளதாகவும் இதனால் இளையராஜா தற்போது மன உளைச்சலில் இருப்பதால் இன்று பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா இன்று செல்லவிருந்த நிலையில் திடீரென அவரது திடீர் முடிவு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது