கருணாநிதி மறைவு: ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இரங்கல்

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத வகையில் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

விஜய், விக்ரம், நயன்தாரா, ஷங்கர் உள்பட பலர் வெளிநாட்டிலும் வெளி மாநிலங்களிலும் பிசியான பணியில் இருந்ததால் அவர்களால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை

அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆஸ்திரேலியாவில் உள்ளார். கருணாநிதியின் மறைவு குறித்து அவர் அங்கிருந்து வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

அரசியலாகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும் தமிழ் ஆர்வமாகட்டும் என எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞர் ஐயா அவர்களின் இழப்பு நமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கலைஞர் ஐயாவை கூறமுடியும். இந்த தினத்தில் நான் ஆஸ்திரேலியாவில் ஆறு மாதங்களுக்கு முன் ஒப்புக்கொண்ட ஒரு இசை நிகழ்ச்சிக்காக எனது இசைக்குழுவினர்களுடன் உள்ளேன். கலைஞர் ஐயா அவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

More News

இதுதான் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை தவிக்கவிட்டு மரணம் அடைந்தார்.

நயன்தாரா இதுவரை நடிக்காத வேடம்: புதிய தகவல்

நயன்தாரா கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வேடங்களிலும் நடித்துவிட்டார். சாதாரண கிராமத்து பெண் முதல் சிபிஐ அதிகாரி, கலெக்டர் வரை நடித்துவிட்ட நயன்தாரா, நடிக்காத வேடங்கள் குறைவு .

இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ: கலைஞர் குறித்து விஜயகாந்த் கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று கதறியழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்

கருணாநிதி மறைவு எதிரொலி: ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்களும், சக நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காலத்தை வென்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம்: கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது