கமலுடன் 11 வருடங்கள் கழித்து இணையும் கின்னஸ் சாதனையாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த தகவலை நேற்றைய நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் கமல் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற விக்ரம் பிரபுவின் 'வாஹா' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், இந்த படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் முக்கிய வேடத்திலும் அவருடன் ரம்யாகிருஷ்ணன் மற்றும் மகள் ஸ்ருதிஹாசனும் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு 1000 படங்களுக்கு இசையமைத்து கின்னஸ் சாதனை புரிந்த இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு பின்னர் 11 வருடங்கள் கழித்து மீண்டும் உலக நாயகனும், இசைஞானியும் இந்த படத்தில்தான் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் நடித்த 'சாணக்கியன்' என்ற மலையாள படத்தை இயக்கிய ராஜீவ்குமார் இயக்கவுள்ள இந்த படத்திற்கு கமல்ஹாசனே திரைக்கதை எழுதியுள்ளார். காமெடி மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments