திரை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: இளையராஜாவின் இரங்கல் செய்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
புரட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பல திரைப்படங்களுக்கு ஆழ்ந்த அர்த்தமுள்ள திரைப்பட பாடல்களை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் என்பதும், அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்பதையும் பார்த்தோம்.
புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மறைவிற்கு அதிமுக பிரமுகர்கள், திரை உலக பிரமுகர்கள், கவியரசு வைரமுத்து உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தற்போது இரங்கல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
1995-ஆம் ஆண்டு பிறந்த இராமசாமி என்ற தன் இயற்பெயரை தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக புலமைப்பித்தன் என்று மாற்றிக் கொண்டதாகவும் அறிந்தேன். என்னுடைய இசையில் பலநூறு நல்ல திரைப்படங்களை எழுதினார். அவருடைய பாடல்களில் வார்த்தைகள் அழகிற்காக மட்டுமின்றி உயர்ந்த இலக்கியத் தரத்திற்காகவும் மக்களால் பாராட்டுப் பெற்றது. கவிஞரின் மறைவு நமது தமிழ் திரை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வயது மூப்பின் காரணமாக மறைந்த கவிஞரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழ்க் கலைஉலகில்
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்
திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ் செய்தவர்
அவருடைய பலபாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை
தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்
அவர் மறைவு
துயரம் தருகிறது
குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
தமிழ்க் கலைஉலகில்
— வைரமுத்து (@Vairamuthu) September 8, 2021
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்
திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ் செய்தவர்
அவருடைய பலபாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை
தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்
அவர் மறைவு
துயரம் தருகிறது
குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com