காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்திய விவகாரம்.. இளையராஜாவுக்கு நீதிபதி கேள்வி..!
- IndiaGlitz, [Wednesday,April 24 2024]
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒப்புதல் பெறாமல் பயன்படுத்தியது குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒப்புதல் பெறாமல் பயன்படுத்தியது குறித்த வழக்கில் எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த விசாரணையில் ஒரு பாடலில் வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் என்பதால் பாடல் ஆசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும் என்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
முன்னதாக இளையராஜா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ’இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என்று தெரிவித்தார். ஆனால் எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இசையமைப்பதற்காக இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்று விடும் என்றும் தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கூறினர்.
இந்த வழக்கின் விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள் பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறியுள்ளனர்