இந்த பாடலுக்கு அழிவே இல்லையா? மீண்டும் டிரெண்ட் ஆகும் 'கண்மணி அன்போடு காதலன் நான்'..!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’குணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் திரைப்படம் ரிலீஸ் ஆன போதே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த இந்த பாடல் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் மனதை வென்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சரியான காட்சியில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டதை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தார்கள் என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்ததற்கு இந்த பாடல் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 33 வருஷங்களுக்கு பிறகு ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ மூலம் ட்ரெண்டான 'கண்மணி அன்போடு’ பாடல் தற்போது மீண்டும் ஒருமுறை டிரெண்டாகி உள்ளது. இந்த பாடலுக்கு வயலின் மூலம் ஒரு சிறுமி இசையமைக்கும் வீடியோவை இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த பதிவில் அவர் ’குட்டி வயலின் கலைஞர்’ என்று பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து ’கண்மணி அன்போடு காதலன் நான்’ என்ற பாடலுக்கு அழிவே இல்லையா, காலத்தால் அழியாத பாடல், மீண்டும் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.