தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி.. இசைஞானியின் சூப்பர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் தான் நடக்கின்றன என்ற நிலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெறும் என இசைஞானி இளையராஜா சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதி நடந்தபோது, அந்த இசை கச்சேரியில், மழையிலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல், அவருடைய பாடல்களை ரசித்து கேட்டனர். இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம்
மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்."
மேலும், ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற "ராஜா கைய வச்சா" பாடலை கம்போஸ் செய்யும் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி என்ற இளையராஜாவின் அறிவிப்பு, இசை ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! 🙏 இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் pic.twitter.com/MlRvizySkP
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments