தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி.. இசைஞானியின் சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

பொதுவாக பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் தான் நடக்கின்றன என்ற நிலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெறும் என இசைஞானி இளையராஜா சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதி நடந்தபோது, அந்த இசை கச்சேரியில், மழையிலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல், அவருடைய பாடல்களை ரசித்து கேட்டனர். இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம்

மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்.

மேலும், ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வச்சா பாடலை கம்போஸ் செய்யும் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி என்ற இளையராஜாவின் அறிவிப்பு, இசை ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

மீண்டும் கார் ரேஸ் களத்தில் அஜித்.. உறுதி செய்த பிரபலங்கள்..!

நடிகர் அஜித் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: பிரபல மலையாள நடிகர் கைதாகி சில நிமிடங்களில் விடுதலை..!

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதன் காரணமாக

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியை ஒப்பிடலாமா? பிக்பாஸ் ரச்சிதா கூறிய பரபரப்பு தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை அவர் தொகுத்து வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில்,

தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் அறிவிப்பு..!

தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்தில், பிரபல நடிகர் ஒருவர் தனுஷின் சகோதரராக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நான் 'இட்லி கடை' படத்தில் நடிக்கவில்லை," என்று அந்த நடிகர் தனது சமூக வலைதளத்தில் விளக்கம்

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ரொமான்ஸ் பாடல்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்..!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த "அமரன்" திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்