இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை.. கண்கலங்கி இளையராஜா கூறிய விஷயம்!

இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் என இசைஞானி இளையராஜா கண் கலங்கியவாறு கூறிய விஷயம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மருதுமோகன் என்பவர் எழுதிய சிவாஜி கணேசன் என்ற நூல் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு பேசினார் .அதில் அவர் பேசியபோது, ‘சிவாஜி கணேசன் அவர்களை கெளரவப்படுத்துவதற்காக அவர் குதிரையில் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு வெள்ளி சிலை அமைக்க வேண்டும் என்று எஸ்பி முத்துராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிதி திரட்டி வந்தார்கள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் அந்த சிலைக்காக நிதியைக் கொடுத்த நிலையில் என்னிடமும் நிதி கேட்க வந்தார்கள். அப்போது இந்த சிலையை வடிவமைக்க எவ்வளவு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று நான் கேட்டபோது அவர்கள் ஒரு தொகையை சொன்னார்கள். அந்த தொகை முழுவதும் நானே தருகிறேன் என்று நான் அந்த தொகையை கொடுத்தேன்.

நான் சிவாஜி கணேசன் சிலையை அமைக்க எவ்வளவு ரூபாய் கொடுத்தேன் என்று தம்பட்டம் அடிப்பதற்காக இந்த விஷயத்தை கூறவில்லை. சிவாஜி கணேசன் மீது நான் வைத்துள்ள பற்றை தெரிவிக்கவே இதை கூறுகிறேன். இதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரியாது’ என்று கூறினார்.