இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்: சொன்னது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று மத்திய அரசு நியமன ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது என்பதும், இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜாவுக்கு நியமன ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்து நிலையில் நேற்று இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது
இசைஞானி இளையராஜா, பிடி உஷா, கே.வி. ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட 4 பேருக்கு நியமன ராஜ்யசபா எம்பி வழங்கப்பட்டது. இதனை அடுத்து இளையராஜாவுக்கு பல திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது: இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!
அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் இளையராஜாவுக்கு கிடைத்த ராஜ்யசபா பதவி குறித்து கூறியிருப்பதாவது: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022
இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' @ilaiyaraaja அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! pic.twitter.com/zCqWAzA7RJ
— M.K.Stalin (@mkstalin) July 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout