இளையராஜாவின் சூப்பர்ஹிட் புத்தாண்டு பாடல்: அவரே பாடிய வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்படும் போது இளையராஜா இசையில் கமலஹாசன் நடிப்பில் உருவான ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ என்ற பாட்டு ஒலிக்காத இடமே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பயங்கர ஹிட் ஆனது என்பதும் இந்த பாடல் இல்லாமல் எந்த ஒரு புத்தாண்டும் தமிழர்களால் இதுவரை கொண்டாடப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கும் தமிழக மக்கள் இந்த பாடலை ஒலித்துக்கொண்டே புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ’இளமை இதோ இதோ’ என்ற பாடலை பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
காரில் சென்று கொண்டிருக்கும் போதே இளையராஜா பாடும் இந்த வீடியோவை இசை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments