ஜனாதிபதி வேட்பாளரா இளையராஜா? பாஜகவின் வியூகத்தால் திமுகவுக்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய ஜனாதிபதி வேட்பாளராக இளையராஜா நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் பாஜக தரப்பில் இருந்து இளையராஜா, இஸ்ரோ சிவன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியவர்களின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் சார்பில் திமுக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவிற்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிற்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் ஒரு தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் திமுகவுக்கு தர்மசங்கட நிலை ஏற்படும் என பாஜக வியூகம் அமைத்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இஸ்ரோ சிவன், இளையராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவருமே தமிழர்கள் என்பதால் திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று பாஜகவின் முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் திமுக இதுகுறித்து என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments