என்னை அரசியலுக்கு வந்தே ஆகணும் என்று முதலில் சொன்னவர் இவர்தான்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவரது அரசியல் முடிவுக்கு யார் காரணம் என்பதை கமல் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பே, என்னை அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் இளையராஜாவுக்கு உடனே இசை வந்துவிடுவதை போல் தனக்கு அரசியல் வரவில்லை என்றும், அரசியலுக்கு வர சற்று காலதாமதம் ஆகிவிட்டதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இளையராஜா போன்ற மூத்தவர்களிடம் நான் உத்தரவு வாங்கிக்கொண்டு களத்தில் இறங்க போகிறேன். மக்களை சந்திக்கும் என்னுடைய பயணத்தையும் தொடங்க போகிறேன்' என்று கூறினார்.

மேலும் கமல் அரசியல் இளையராஜா கூறியபோது, 'ஒருவருடைய தலையெழுத்தை வைத்து அவர்கள் நாட்டை ஆள்வதில்லை,. நம் ஒவ்வொருவரின் தலையெழுத்திலும் இவர் தான் நம்மை ஆளவேண்டும் என்று எழுதியிருக்க வேண்டும், இதுவரை சினிமா தான் ஆட்சி செய்துள்ளது, இனிமேலும் ஆளட்டுமே என்று கமலுக்கு வாழ்த்து கூறினார்.

More News

ரஜினியை அடுத்து மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்றார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

சிரியாவில் கொத்து கொத்தாக பலியாகும் சின்னஞ்சிறு சிறார்கள்

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தும் முடியவில்லை

ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி!

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே சிறந்த திரை ஜோடியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

அஜித் குடும்பத்தை உலுக்கிவிட்ட ஸ்ரீதேவி மரணம்

அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகை உலுக்கிவிட்டது. ஸ்ரீதேவியின் மறைவிற்கு கமல், ரஜினி மட்டுமின்றி இன்னொரு ஸ்டார் குடும்பத்தையும் உலுக்கிவிட்டதாம்.

தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். 'கரு' நாயகி

சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படமான 'கரு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்