பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் இளையராஜா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களாக பிரசாத் ஸ்டூடியோ மற்றும் இளையராஜா இடையே பிரச்சனை நடந்து கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை இளையராஜா சார்பில் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றுவதை எதிர்த்தும் தியானம் செய்ய ஒருநாள் அனுமதிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது பிரசாத் ஸ்டூடியோ தரப்பிலிருந்து இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், ‘எங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் இளையராஜா வாபஸ் பெற வேண்டும் மற்றும் தான் இசையமைத்த பகுதிக்கு அவர் உரிமை கோரக்கூடாது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டால் அவருக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை இளையராஜா ஏற்று கொண்டதை அடுத்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த ஒரு நாள் எது என்பதை இளையராஜாவே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்று தியானம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வார் என்றும் அதன்பிறகு அவர் தனக்கு சொந்தமான பொருள்களை மட்டும் எடுத்துவிட்டு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறுவார் என்றும், பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இருக்கும் நேரம் முழுவதிலும் வழக்கறிஞர்கள் கூடவே இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா வந்துள்ளதை அடுத்து அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com